சிப்காட்டில் விதிமுறைகளை மீறியதாக 140 பேர் மீது வழக்கு

சிப்காட்டில் விதிமுறைகளை மீறியதாக 140 பேர் மீது வழக்கு
சிப்காட்டில் விதிமுறைகளை மீறியதாக 140 பேர் மீது வழக்கு
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனை சாவடி, பள்ளேரி மற்றும் சிப்காட் பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 140 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com