புதிதாக 1,812 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக 1,812 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
புதிதாக 1,812 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

மும்பை, 

மராட்டியத்தில் புதிதாக 1,812 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 1,675 பேர் பாதிப்பில் இருந்து குணமானார்கள். மாநிலத்தில் இதுவரை 80 லட்சத்து 59 ஆயிரத்து 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 78 லட்சத்து 99 ஆயிரத்து 582 பேர் குணமாகினர். தற்போது மாநிலத்தில் 12 ஆயிரத்து 11 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் மேலும் ஒருவர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார். இதுவரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 139 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தலைநகர் மும்பையில் புதிதாக 465 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. புதிய உயிரிழப்புகள் இல்லை. நகரில் இதுவரை 11 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 2 ஆயிரத்து 142 நாட்களாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com