ரூ.19 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்த பிரபல செல்போன் நிறுவன அதிகாரி கைது

ரூ.19 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட பிரபல செல்போன் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ரூ.19 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்த பிரபல செல்போன் நிறுவன அதிகாரி கைது
Published on

மும்பை, 

ரூ.19 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட பிரபல செல்போன் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ரூ.19 கோடி மோசடி

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல செல்பேன் நிறுவனம் ஒப்போ. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் நிதி மற்றும் கணக்குப்பிரிவு மேலாளராக இருப்பவர் மகேந்திரகுமார் ராவத். இவர் போலி ரசீதுகள் மூலம் ரூ.19 கோடி ஜி.எஸ்.டி. வரி (இன்புட் டாக்ஸ் கிரெடிட்) மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதாவது செல்போன்கள் எதுவும் சப்ளை செய்யாமல், செய்தது போல ரசீது தயார் செய்து வரி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதிரடி கைது

இதையடுத்து மும்பை மண்டல சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள், மோசடி தொடர்பாக மகேந்திரகுமார் ராவத்தை தானேயில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

ஜி.எஸ்.டி. மோசடியில் பிரபல செல்போன் நிறுவன அதிகா கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com