மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது
Published on

ஆவூர்
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட மதயானைப்பட்டி கலிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டிய கோரையாறு பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச்சென்று மறைவான இடத்தில் குவித்து வைத்து லாரிகளில் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது கலிமங்கலம் அருகே கோரையாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்த கலிமங்கலம் கிராமத்தை சேர்ந்த செபஸ்தியார் மகன் கென்னடி (வயது 36), பன்னீர்செல்வம் மகன் ராமராஜ் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலா அரை யூனிட் மணலுடன் 2 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் கென்னடி ஏற்கனவே மணல் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com