மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
மணல் கடத்திய 2 பேர் கைது
Published on

தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாதம்பேட்டையை சேர்ந்த உத்திராபதி மகன் வல்லரசு (வயது 24) என்பவர் மொபட்டில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை பிடித்து தா.பழூர் போலீசில் சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து வல்லரசுவை கைது செய்தார். மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல தென்கச்சி பெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் கொள்ளிடக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இடங்கண்ணியை சேர்ந்த ஆனந்தன் (38) மொபட்டில் மணல் கடத்தி வந்தார். இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com