

கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்கனந்தல் அம்பேத்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காமராஜர் மகன் மதன்குமார்(வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சரவணபாக்கம் கூட்டுரோடு பகுதியில் கஞ்சா விற்ற துலங்கம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் இருசன் (23) என்பவரை திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் கைது செய்தார்.