கஞ்சா விற்ற 2பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
கஞ்சா விற்ற 2பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் காட்வின் ஜெபா (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் தூத்துக்குடி 1-ம் கேட் அருகே உள்ள ஒரு ஆலயத்தின் அருகில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம்.

இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா விரைந்து வந்து கஞ்சா விற்பனை செய்ததாக காட்வின் ஜெபாவை கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

இதே போன்று தாளமுத்துநகர் திரேஸ்நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக முத்துராஜா (31) என்பவரை தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் கைது செய்தார். முத்துராஜாவிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com