மதுரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

மதுரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

மதுரை,ஏப்.

மதுரை மதிச்சியம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வைகை வடகரை ஆசாரித்தோப்பு பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது மொபட்டில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை பிடிக்க முயன்றனர். அதில் 2 பேர் தப்பி செல்ல ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார்.

விசாரணையில் அவர் மதிச்சியம் ஆழ்வார்புரத்தை சேர்ந்த ரவுடி சதீஸ்குமார் (வயது 22) என்பதும், அவர் மெபட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் மெபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார்த்திக், அழகுபாண்டியை தேடி வருகின்றனர்.

அதே போன்று செல்லூர் போலீசார் களத்துபொட்டல் பகுதியில் கஞ்சா விற்ற தத்தனேரியை சேர்ந்த வேல்முருகன் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com