கஞ்சா விற்ற 2 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பாலாஜி மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த ஆதிமூலம் மகன் முருகன் என்ற ஓட்டப்பல் முருகன் (வயது 24), வெட்டும்பெருமாள் மகன் ராஜா (38) என்பதும், அவர்கள் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com