கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஆரணியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

ஆரணி

ஆரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் நந்தகுமார் (வயது 20) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் பையூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (27) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com