

போடி:
போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் ராசிங்காபுரத்தில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 43) வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த செல்லகாமு (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.