கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது

கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது
Published on

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த கா.அம்பாபூர் கரை வெட்ட ஓடையில் கிராவல் மண் அள்ளப்படுவதாக காவனூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு அவரும், போலீசாரும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசுக்கு சொந்தமான கரை வெட்ட ஓடையில் பாக்லைன் எந்திரம் மூலம், டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளியவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கா.அம்பாபூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கண்ணதாசன்(வயது 45), பாலகிருஷ்ணன்(47), ராமதாஸ் (38), செங்குழி கிழக்கு தெருவைச் சேர்ந்த மணிபாலன் (28) ஆகியோர் கரை வெட்ட ஓடையில் பல மாதங்களாக அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி, கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணன், கண்ணதாசனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராமதாஸ் மற்றும் மணிபாலன் ஆகியோரை தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர், டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com