டிராக்டரில் கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது

டிராக்டரில் கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டிராக்டரில் கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது
Published on

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டத்தை வடக்கு புதுக்குடி அரசு பள்ளி அருகே டிராக்டரில் கிராவல் மண் கடத்தப்படுவதாக ஆண்டிமடம் தாசில்தாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது டிராக்டரில் கிராவல் மண் ஏற்றி வந்த 2 பேரை பிடித்து விசாரித்தார். இதில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் இளையராஜா(வயது 23) மற்றும் கலியபெருமாள் மகன் சத்ரியன்(34) என்பதும், கிராவல் மண் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து இளையராஜா, சத்ரியன் ஆகியாரை கைது செய்த ஜெயங்கொண்டம் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com