

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி தா.பழூர் அருகே உள்ள பாலசுந்தரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சிலர் மொபட்டுகளில் மணல் மூடைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்ற போது மணல் மூட்டைகளையும், மொபட்களையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தாதம்பேட்டை காலனி தெருவை சேர்ந்த சசிகுமார் (30), பிரேம்குமார் (27), விக்னேஷ் (25), காமராஜ் (60), முனியப்பன் (45) ஆகியோர் மணல் மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காமராஜ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை தா.பழூர் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.