மயிலாடுதுறை அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

மயிலாடுதுறை அருகே மணல் கடத்திய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே மாப்படுகை பகுதியில் காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மாப்படுகை அண்ணா சிலை அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த வேனில் இருந்த மணல் காவிரி ஆற்றில் இருந்து அல்லப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சோழம்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திராபதி மகன் கண்ணன் (வயது 37) என்பவரையும், வேனின் உரிமையாளர் மாப்படுகை அண்ணா சிலை அருகே பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் (45) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com