காட்பாடியில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது

காட்பாடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்பாடியில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
Published on

வேலூர்

வேலூர் மாவட்டம், காட்பாடி வஞ்சூரை சேர்ந்தவர் பாபு (வயது 28). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்தபோது அதை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது மோட்டார்சைக்கிளை திருடியது கழிஞ்சூரை சேர்ந்த மதன்குமார் (வயது 23) மற்றும் 18 வயதுடைய வாலிபர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com