2 வீடுகளில் பணம், பொருட்கள் திருட்டு

2 வீடுகளில் பணம், பொருட்கள் திருட்டு
2 வீடுகளில் பணம், பொருட்கள் திருட்டு
Published on

மதுரை

மதுரை செல்லூர் தத்தனேரி அய்யனார் காலனியை சேர்ந்தவர் சின்னபாண்டியராஜன்(வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(49). இவர் காலையில் வெளியே சென்றுவிட்டு மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம், கண்காணிப்பு கேமரா மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com