விபத்தில் 2 பேர் பலி

விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் 2 பேர் பலி
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள தேவையூர் கிராமம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் வினோத்(வயது 18). இவர், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னு மகன் வேலுசாமி (50) என்பவர் தனது வீட்டிற்கு செல்ல லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றநிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவையூர் பிரிவு சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது, அவ்வழியே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வினோத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வினோத், வேலுசாமி மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கியை ஓட்டி வந்த பெரம்பலூர் வள்ளலார் தெருவைச் சேர்ந்த பழனிவேல் மகன் சந்திரசேகர்(31) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், ஏற்கனவே வினோத் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே வேலுசாமி உயிரிழந்தார். சந்திரசேகர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com