ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 35 வயது வாலிபர், சென்னை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
Published on

தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 35 வயது வாலிபர், சென்னை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரது கையில் சிவசாமி என பச்சை குத்தப்பட்டு இருந்தது.

அதேபோல காட்டாங்கொளத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 60 வயது மூதாட்டி ஒருவரும் சரக்கு ரெயில் மோதி பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

தாம்பரம் ரெயில்வே போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com