புனேவில் இருந்து தமிழகத்துக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வந்தன

புனேவில் இருந்து தமிழகத்துக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வந்தன.
புனேவில் இருந்து தமிழகத்துக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வந்தன
Published on

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 4 கோடியே 40 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 17 பெட்டிகளில் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை வந்த தடுப்பூசிகள், உடனடியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com