மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி புதிதாக 20 பேருக்கு தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி புதிதாக 20 பேருக்கு தொற்று
Published on

புதுக்கோட்டை:

20 பேருக்கு தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கிறது. தொற்று பாதிப்பு தினமும் சராசரியாக 20 எண்ணிக்கைக்குள் உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2 பேர் பலி

இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 2 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 401 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com