பொதுஇடத்தில் தகராறு செய்த 2 பேர் கைது

கோட்டுச்சேரி அருகே பொதுஇடத்தில் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொதுஇடத்தில் தகராறு செய்த 2 பேர் கைது
Published on

கோட்டுச்சேரி

திரு-பட்டினம் போலீசார் திட்டச்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் ஓலையன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் (வயது 22), என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அன்னவாசலில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்ட பருத்திக்குடி ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த திவாகர் (20) என்பவரை நெடுங்காடு போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com