கொள்ளையடிக்க வீடுகளை நோட்டமிட்ட 2 பேர் கைது

கோட்டுச்சேரி அருகே வீடுகளை கொள்ளையடிக்க நோட்டமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளையடிக்க வீடுகளை நோட்டமிட்ட 2 பேர் கைது
Published on

கோட்டுச்சேரி

நிரவி போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால்-நாகூர் நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகை மாவட்டம் காடம்பாடியை சேர்ந்த கிளெமெண்ட் (வயது 38) என்பதும், கொள்ளையடிக்கும் நோக்கில் வீடுகளை நோட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் நேதாஜி நகரில் கொள்ளையடிக்க வீடுகளை நோட்டமிட்ட நாகை மாவட்டம் சுனாமி நகரைச் சேர்ந்த அருண்குமார் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com