வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

காரைக்கால் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துக்கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
Published on

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த நல்லம்பல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கலியபெருமாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த கலியபெருமாள், நேற்று எல்.ஜி.ஆர். நகர் சம்சுதீன் என்பவரின் கொல்லைபுறத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் அம்பகரத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல நெடுங்காட்டை அடுத்த வடமட்டம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியசாமி (46), இன்று காலை பொன்பேத்தி - கிளியனூர் சாலையில் கருவேல மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட நரம்பு தளர்ச்சியால் ஆரோக்கியசாமி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com