பொதுமக்களை கல்லால் தாக்கி மிரட்டிய 2 பேர் கைது

அரியாங்குப்பம் புறவழி சாலையில் பொதுமக்களை கல்லால் தாக்கி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்களை கல்லால் தாக்கி மிரட்டிய 2 பேர் கைது
Published on

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் புற வழி சாலையில் உள்ள புதிய பாலம், பாண்டி கடலூர் ரோட்டில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் கையில் கல்லை வைத்து கொண்டு, அந்த வழியாக காரில் சென்றவர்களை நிறுத்தி வீண் தகராறு செய்ததுடன் தட்டிக் கேட்ட பொதுமக்களை தாக்கி தரக்குறைவாக பேசி மிரட்டுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் இந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ரகளையில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் வீராம்பட்டினம், தெற்கு தேரோடும் வீதி, மகேஸ்வர்மா (எ) வர்மா (வயது 25) வீராம்பட்டினம் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்த ரனிஷ் (21) என தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கைது செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com