வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி

நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரை சேர்ந்தவர் சுப்புகுட்டி மகன் மணிகண்டன் (வயது 30). இவர் நெல்லை பகுதியில் உள்ள மில்லில் வேலை செய்து வந்தார். இவரது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு புறப்பட்டார்.

நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பொன்னாக்குடி பகுதியில் வந்த போது மணிகண்டனின் மோட்டார் சைக்கிளும், மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழவூர் அருகே உள்ள ஆவரைகுளம் புதூர் சாலையை சேர்ந்தவர் ராமு மகன் ஆகாஷ் (18). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஆகாஷ் பழவூர் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com