ரெயிலில் வந்த 2 ஆயிரத்து 450 டன் ரேஷன்அரிசி

ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயில் மூலம் 2,450 டன் ரேஷன் அரிசி வந்தது.
ரெயிலில் வந்த 2 ஆயிரத்து 450 டன் ரேஷன்அரிசி
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் ரேஷன்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது.

இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் நேரடியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி நேற்று ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்து 450 டன் ரேஷன் புழுங்கல் அரிசி திண்டுக்கல்லுக்கு வந்தது.

இதையடுத்து லாரிகள் மூலம் அவை, முருகபவனம் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து தேவைக்கு ஏற்ப ரேஷன்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com