கடத்தி வரப்பட்ட 2½ டன் மாட்டிறைச்சி பறிமுதல்

மலேகாவில் இருந்து கடத்தி வந்த 2½ டன் மாட்டிறைச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தி வரப்பட்ட 2½ டன் மாட்டிறைச்சி பறிமுதல்
Published on

மும்பை, 

மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாசிக் அருகே உள்ள மலேகாவில் இருந்து மும்பைக்கு மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் மான்கூர்டு-காட்கோபர் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்தில் இறைச்சியை கும்பல் ஏற்றி கொண்டு இருந்ததை போலீசார் கண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று, வாகனத்தில் ஏறி நடத்திய சோதனையில் 3 வாகனங்களில் தடை செய்யப்பட்ட 2 அரை டன் எடையுள்ள மாட்டிறைச்சி இருந்ததை கண்டனர். இதனைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இறைச்சியை கடத்த முயன்ற 10 பேரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், மலேகாவை சேர்ந்த சபீக் தடா என்பவரிடம் இருந்து மும்பையை சேர்ந்த சஜித் குரோஷி என்பவரிடம் ஒப்படைக்க மாட்டிறைச்சியை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com