மின்னல் தாக்கி 2 வயது சிறுவன் பலி

மராட்டியத்தில் மின்னல் தாக்கி 2 சிறுவன் பலியானான்.
மின்னல் தாக்கி 2 வயது சிறுவன் பலி
Published on

மும்பை, 

மராட்டியத்தில் மின்னல் தாக்கி 2 சிறுவன் பலியானான்.

சிறுவன் பலி

பால்கர் மாவட்டம் மனோர், எம்புர் தேகேபாடா பகுதியை சேர்ந்தவர் சச்சின். இவரது மகன் யாஷ் (வயது2). நேற்று  மாலை சச்சின் வயலுக்கு சென்றுவிட்டார். மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மழை பெய்தது. அப்போது சிறுவன் யாஷ் வீட்டின் வெளியே நின்று மழையை ரசித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திடீரென சிறுவனை மின்னல் தாக்கியது. 100 சதவீதம் தீக்காயமடைந்த சிறுவனை குடும்பத்தினர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரூ.4 லட்சம் நிவாரணம்

இந்தநிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தாசில்தார் சுனில் ஷிண்டே கூறினார். மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் மனோர் பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மழை பெய்யும் போது பொதுமக்கள் மரத்திற்கு அடியில் அல்லது திறந்தவெளியில் நிற்க வேண்டாம் என தாசில்தார் சுனில் ஷிண்டே மனோர் பகுதி மக்களை கேட்டு கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com