தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வடக்கு கல்மேடு-பட்டீயூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வேப்பலோடை வி. பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த மணி மகன் சூர்யா (22) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் சூர்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்

புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பேது, புதுககோட்டை பிரகாஷ்நகர் பகுதியில் சாயர்புரம் காமராஜ் நகரை சேர்ந்த மணி என்ற கருவேல்மணி என்பவரது மகன் ஞானராஜ் (21) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ஞானராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com