சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்; சென்னை ‘போக்சோ' கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்; சென்னை ‘போக்சோ' கோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை பாடி கலைவாணர்நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 20.12.2018 அன்று தனது தோழியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 27) என்பவர் நைசாக பேசி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதன்பின்பு, அந்த சிறுமியை கடற்கரையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் போக்சோ கோர்ட்டு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வராஜ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com