கஞ்சா விற்ற 3 பேர் கைது

வேலூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

வேலூர்

வேலூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பழைய பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த நசீர் (வயது 21), சுகேல்அகமது (21), ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த ஷாபிக் (20) என்பதும், 3 பேரும் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

அதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com