கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராமையா தெருவில் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்ற போது, அங்கிருந்த ஒருவர் மீது சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரித்தனர். அதில் பெத்தானியாபுரத்தை சேர்ந்த பாரதிபாண்டியன் (வயது 23) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதே போன்று அவனியாபுரம் போலீசார் செம்பூரணி ரோட்டில் கஞ்சா விற்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கணேஷ் (21), இந்திரா காலனியை சேர்ந்த அனுஷ்குமார்(21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது, அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com