கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருவண்ணாமலை

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்த திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் கோவிலாணூர் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் (வயது 22) மற்றும் கீழ்அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க ஒருவரை ஜமுனாமரத்தூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் ஜமுனாமரத்தூரில் கஞ்சா பயிரிட்டு அறுவடை செய்து விற்பனை செய்து வந்த ஜமுனாமரத்தூரை அடுத்த திமிரிமரத்தூர் பகுதியை சேர்ந்த நடராஜன் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கண்ட 3 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com