

ஜெகதாப்பட்டினம்:
ஜெகதாப்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஜெகதாப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெகதாப்பட்டினம் கடைத்தெருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மூக்கையன் மகன் சிவா (வயது 36) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 500 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் சிவாவிற்கு கஞ்சா விற்பனைக்கு துணைபோன அவரது நண்பர்கள் பாண்டி மற்றும் காளிதாஸ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.