கட்டுமான தொழிலாளி கொலையில் 3 பேர் கைது; செல்போன் தர மறுத்ததால் கொன்றதாக வாக்குமூலம்

கட்டுமான தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது. செல்போன் தர மறுத்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்
கட்டுமான தொழிலாளி கொலையில் 3 பேர் கைது; செல்போன் தர மறுத்ததால் கொன்றதாக வாக்குமூலம்
Published on

தானே, 

தானே மாவட்டம் அம்பர்நாத் குளத்தில் மிதந்த ஆண் உடலை போலீசார் கடந்த 4-ந்தேதி மீட்டனர். விசாரணையில், அந்த நபர் கட்டுமான தொழிலாளியான லால்ஜி (வயது32) என்பது தெரியவந்தது. இவர் அம்பர்நாத் பலேகாவ் எம்.ஐ.டி.சி. பகுதியில் வேலை பார்த்து வந்ததாகவும், அவரை சக தொழிலாளிகள் அடித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை பிடிக்க தேடி வந்தனர். இந்த நிலையில் ஷம்பு மஞ்சி, மனோதீப், சிலா மஞ்சி ஆகியோர் பிடிபட்டனர். சம்பவத்தன்று லால்ஜி செல்போன் தர மறுத்ததால் இவர்கள் 3 பேரும் சேர்ந்து தலையில் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை குளத்தில் வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com