3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் ரூ.21 கோடி ஹெராயினை பதுக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி கடந்த 21.12.21 அன்று தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதை பொருளை மத்திய பாகம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஹெராயின் போதை பொருளை பதுக்கியதாக, தருவைகுளம் அம்புரோஸ்நகரை சேர்ந்த சவரிமுத்து மகன் அந்தோணிமுத்து (வயது 42), நவமணி நகரை சேர்ந்த ராஜேந்தர் மகன் பிரேம்சிங் (38), பட்டினமருதூரை சேர்ந்த சவுகத் அலி மகன் கசாலி மரைக்காயர் (27) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்தோணிமுத்து, பிரேம்சிங், கசாலி மரைக்காயர் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் சட்டத்தின் கீழ் அந்தோணிமுத்து, பிரேம்சிங், கசாலி மரைக்காயர் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com