லாத்தூரில் ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

லாத்தூரில் ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
லாத்தூரில் ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
Published on

லாத்தூர்,

லாத்தூரில் ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

குளிக்க சென்ற சிறுவர்கள்

லாத்தூர் மாவட்டம் ஜல்கோட் தாலுகா லாலி கிராமத்தில் நேற்று காலை சிறுவர்கள் உள்பட 4 பேர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். இதில் சங்கமேஷ்வர் (வயது13) என்ற சிறுவன் ஆற்றில் குளிக்க உள்ளே குதித்தான். ஆனால் அவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்க தொடங்கினான்.

இதனை கண்ட அண்ணன், தம்பியான ஷியாம் (15), ஏக்நாத் (14) ஆகியோர் சங்கமேஷ்வரை காப்பாற்ற ஆற்றில் குதித்தனர். ஆனால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

3 பேரும் பலி

இதனை கண்ட அவர்களுடன் வந்த விஷ்ணு (18) என்ற வாலிபர் உதவி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இது பற்றி அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கிய 3 பேரை மீட்க முயன்றனர்.

இதற்கிடையே தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெகுநேரம் தேடினர். அதன்பிறகு தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் பிணமாக மீட்டனர். போலீசார் 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com