கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி புதிதாக 56 பேருக்கு பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 56 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி புதிதாக 56 பேருக்கு பாதிப்பு
Published on

கடலூர்,

56 பேருக்கு பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 73 ஆயிரத்து 790 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 56 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து விருத்தாசலம் வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 25 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தெடர்பில் இருந்த 30 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

நேற்று முன்தினம் வரை 71 ஆயிரத்து 493 பேர் குணமடைந்த நிலையில், நேற்று 206 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை கொரோனாவுக்கு 887 பேர் பலியாகியான நிலையில், நேற்று மேலும் 3 பேர் பலியானார்கள்.

இதன் விவரம் வருமாறு:-

3 பேர் பலி

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 63 வயது மூதாட்டி, 54 வயது பெண் ஆகிய 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், கடலூரை சேர்ந்த 48 வயது ஆண் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 890 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதித்த 1036 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியிலும், 221 பேர் வெளி மாவட்ட தனியார், அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com