கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர்

நெல்லை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர்
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகளை மற்றும் போலீசார் பாளையங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக நெல்லை கொக்கிரகுளம் சிவன் கோவில் மேல தெருவை சேர்ந்த சங்கர நாராயணன் (வயது 20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் பெருமாள்புரம் ரெயில்வே கேட் அருகே ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா விற்றதாக பெருமாள்புரம் அரிசி குடோன் சாலையை சேர்ந்த ராமராஜன் (34) என்பவரை கைது செய்து, 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நெல்லை சந்திப்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில்வே கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கஞ்சா விற்றதாக பாளையங்கோட்டை - சீவலப்பேரி சாலை ரெட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சங்கர பாண்டி (49) என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com