மின்சார ரெயிலில் பயணியை தாக்கி கொலை செய்த 3 பேருக்கு வலைவீச்சு

மின்சார ரெயிலில் பயணியை தாக்கி கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மின்சார ரெயிலில் பயணியை தாக்கி கொலை செய்த 3 பேருக்கு வலைவீச்சு
Published on

தானே,

தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி மின்சார ரெயில் கடந்த 1-ந்தேதி இரவு 10.50 மணி அளவில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் கமாலூதீன் சேக் (வயது43) என்ற பயணி பயணம் செய்தார். அப்போது ரெயிலில் இருந்த 3 பேருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கமாலூதீன் சேக்கை சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே ரெயில் மும்ரா ரெயில் நிலையம் வந்த போது அவரை பிடித்து ரெயிலில் இருந்து கீழே இறக்கி தாக்கி விட்டு 3 பேரும் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் கமாலூதீன் சேக் உயிரிழந்தார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து விபத்து வழக்கு பதிவு செய்திருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதனால் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய நபர்கள் யார் எனவும், அவர்களை பிடிக்கவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com