பிரபல ரவுடிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை

பிரபல ரடிவுகள் 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல ரவுடிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை
Published on

சென்னை,

சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிரபல ரடிவுகள் சரவணன்(என்கிற) பாம் சரவணன் (வயது 41), கார்த்திக்(என்கிற) பல்பம் கார்த்திக்(31), ஜெபசேகர் (35) ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதில் பாம் சரவணன் மீது 8 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர் மீது ஏற்கனவே 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பல்பம் கார்த்திக் மீது 3 கொலை வழக்குகள் உள்பட பல வழக்குகள் இருக்கிறது. அவர் 5 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துள்ளார். ஜெபசேகர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் உள்ளது. அவர் மீது 2 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com