மராட்டியத்தில் புதிதாக 307 பேருக்கு கொரோனா தொற்று- உயிரிழப்பு இல்லை

மராட்டியத்தில் புதியதாக 307 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அங்கு உயிரிழப்பு பதிவாகவில்லை.
மராட்டியத்தில் புதிதாக 307 பேருக்கு கொரோனா தொற்று- உயிரிழப்பு இல்லை
Published on

மும்பை,

மராட்டியத்தில் புதிதாக 307 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

307 பேர் பாதிப்பு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சுமார் 300 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் 307 பேர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். ஆனால் உயிரிழப்பு எதுவும் இல்லை. மாநிலம் முழுவதும் 240 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டனர். இதன் மூலம் 1,828 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

சத்தாரா, சாங்கிலி, நந்துர்பர், துலே, பீட், லாத்தூர், ஹிங்கோலி, அகோலா, புல்தானா, யவத்மால், கோண்டியா ஆகிய மாவட்டங்களில் யாரும் பதிக்கப்பட்டு சிகிச்சையில் இல்லை. இதனால் அந்த மாவட்டங்கள் கொரோனா இல்லா சுதந்திர காற்றை சுவாசிக்கிறது.

மும்பை நிலவரம்

மும்பையை பொறுத்தவரை 24 மணி நேரத்தில், 7 ஆயிரத்து 179 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 198 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டனர். 131 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தானே மாவட்டத்தில் புதிதாக 27 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-----

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com