

தடுப்பூசி திருவிழா
புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகள், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.இந்தநிலையில் மேலும் 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.
31 மையங்களில் நடக்கிறது
வில்லியனூர் இமாகுலேட் மகளிர் உயர்நிலைப்பள்ளி, அரியூர் ஶ்ரீ இந்தோசா சாரிடபிள் உயர்நிலைப்பள்ளி, தொண்டமாநத்தம் ராமநாதபுரம் தீப ஒளி உயர்நிலைப்பள்ளி, சேதராப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, கூடப்பாக்கம் ஜவகர்லால் மேல்நிலைப்பள்ளி, கொசப்பாளையம் மணிமேகலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒதியஞ்சாலை கோவிந்த சாலை அரசு ஆரம்பப்பள்ளி, கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி, முருங்கப்பாக்கம் சத்தியமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி, காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை வாசவி இண்டர்நேஷனல் பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
இதேபோல் பெரியார் நகர் முத்தியால்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி, கரையாம்புத்தூர் அரசு தொடக்கப்பள்ளி, மடுகரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி, சூரமங்கலம் ஏரிப்பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளி, திருபுவனை அரசு உயர்நிலைப்பள்ளி, காலாப்பட்டு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இடையார்பாளையம் கம்பன் நகர் சுப்பையா அரசு உயர்நிலைப்பள்ளி,
சேதராப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, கிருமாம்பாக்கம் தியாகி கே.ஆர்.சுப்பிரமணிய படையாட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளி, கரையாம்புத்தூர் அரசு ஆரம்பப் பள்ளி, அரியாங்குப்பம் காக்கையான்தோப்பு அரசு ஆரம்பப்பள்ளி, அபிஷேகப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, தவளக்குப்பம் அரசு ஆரம்பப்பள்ளி, உறுவையாறு நரிமேடு அரசு ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி திருவிழா நடக்கிறது.
இந்த 31 சிறப்பு தடுப்பூசி மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.