மருத்துவப்படிப்புக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு

புதுச்சேரியில் மருத்துப்படிப்புக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இந்த தகவலை சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மருத்துவப்படிப்புக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு
Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் மருத்துப்படிப்புக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இந்த தகவலை சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பு

புதுச்சேரியில் நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை படிப்புகளுக்கு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தநிலையில் மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு முடிந்தநிலையில் காலியாக உள்ள இடங்கள் விவரம் சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்க பெற்றவர்கள் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேருவது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். தவறினால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட் ரத்து செய்யப்படும்.

3-ம் கட்ட கலந்தாய்வு

இந்தநிலையில் மருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு கட்டணமாக ரூ.2 லட்சத்தை சென்டாக் இணையதளத்தில் செலுத்த வேண்டும்.

இந்த தகவலை சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com