சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

வில்லியனூரில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
Published on

வில்லியனூர்

வில்லியனூர் காவேரி நகர் முதலாவது மெயின் ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிறுவர்களுக்கு கஞ்சா விற்று கொண்டிருந்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த ரமேஷ் (வயது 26), முத்தியால்பேட்டை டி.வி. நகர் பிரபாகர் (25), வில்லியனூர் கணுவாப்பேட்டை கரண் (26), வில்லியனூர் காவேரி நகர் தினேஷ் (24) ஆவர். அவர்களிடமிருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் கைதான 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com