மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 4 பேர் கைது
Published on

மேலூர்,மே

சாப்டூர் போலீசார் ரோந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ராமர் (வயது 48) பாலகுருநாதன் (43) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட செம்மினிப்படி கண்மாய் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாச்சாம்பட்டியை சேர்ந்த ஜெயகுமார் (வயது 35) என்பவரை கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

அதேபோன்று கோட்டநத்தம்பட்டியில் சித்தநாதன் (50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com