மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஏமப்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 12 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த செந்தில்குமார்(வயது 36), பெரியசாமி(34) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் 4 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த திலீப்கிருஷ்ணன்(40), பெரியசாமி(39) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com