கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் இறந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் இறந்தனர்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர், 73 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதே போல கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 50 வயது பெண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையிலும், ஓசூர் பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 178 பேர் பாதிக்கப்பட்டனர். 255 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 38 ஆயிரத்து 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 36 ஆயிரத்து 474 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 1,633 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com