ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த 4 பேர் சிக்கினர்

ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த 4 பேர் சிக்கினர்
Published on

மும்பை, 

ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு சொந்தமான பழைய பொருட்களை விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த நபரை தொடர்பு கொண்ட ஆசாமி பொருட்களை வாங்க விருப்பம் இருப்பதாக கூறி கியூ.ஆர் கோடு அனுப்பும்படியும், அதில் பணம் அனுப்புவதாகவும் தெரிவித்தார். இதனால் அந்த நபரும் கியூ.ஆர். கோடு அனுப்பி வைத்த நிலையில் ரூ.9 ஆயிரத்தை பெற்றார்.

சிறிது நேரம் கழித்து தவறுதலாக பணத்தை அனுப்பி விட்டதாகவும் அதனை திருப்பி தருமாறு ஆசாமி தெரிவித்தார். இதன்படி செயல்பட்ட போது நூதனமான முறையில் நபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்து 82 ஆயிரம் அபேஸ் செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்தார்.

4 பேர் கைது

இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், இதே செல்போன் நம்பர் மூலமாக இந்த கும்பல் மீது மராட்டியத்தில் 577 மோசடி புகார்கள் மற்றும் 269 வழக்குகள் பதிவாகி இருப்பதும், கோடிக்கணக்கில் பணமோசடி நடத்தி இருப்பதும் தெரியவந்தது. மும்பையில் 10 வழக்குகளில் ரூ.53 லட்சத்து 74 ஆயிரம் அளவிற்கு மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் துரித விசாரணை நடத்தி இந்த கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், 9 செல்போன்கள், பல்வேறு வங்கிகளின் 32 ஏ.டி.எம் கார்டுகள், காசோலை புத்தகங்கள், 4 சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com